பொதுவாகவே நாளிதழ்கள் ஒற்றைப் பற்றிக் கவலைப்படுவதில்லை; விருப்பத்திற்கிணங்க அதைத் தவிர்த்துவிடுகின்றன. ஒரு நாளிதழின் தலைப்புகளில் மட்டும் தென்படும் தவறுகளைப் பார்க்கலாம் என்று முடிவுசெய்து, நாளிதழைத் திருப்பினால் இரண்டு மூன்று பக்கங்களுக்குள்ளாகவே நமக்கு அயர்ச்சி ஏற்பட்டுவிடுகிறது. ஆனால், தவறுகளுடன் நாளிதழ்களை அச்சாக்கிக் கடைத்தெருவுக்கு விற்பனைக்கு அனுப்பிவிடுவதற்கு அயர்ச்சிகொள்வதேயில்லை நிறுவனங்கள்.
அந்த, இந்த, எந்த என்பவை நிலைமொழியில் இருந்து, வருமொழியில் க,ச,த,ப என்னும் எழுத்துகளில் சொல் தொடங்கினால் ஒற்றிடலாம். ஒற்றிடுதல் பெரும்பிழையன்று.
 |
உலகின் எந்தத் தலைவரும் போரை நிறுத்தவில்லை |
கச்சத்தீவை என்னும் சொல்லில் இரண்டாம் வேற்றுமை இடம்பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து தாரைவார்த்து என்னும் சொல் வந்துள்ளது. ஆகவே, ஒற்றிடலாம்.
 |
கச்சத் தீவைத் தாரைவார்த்துத் தமிழக மீனவர்களுக்குத் துரோகம் |
சிறப்பு என்னும் சொல் வன்றொடர்க் குற்றியலுகரச் சொல். ஆகவே, அங்கேயும் ஒற்றிடலாம்.
 |
சிறப்புப் பிரிவு |
 |
இலங்கைக் கடற்படையினரால்... |
இந்தத் தலைப்பில் துவக்கம் என்று பிரசுரிக்காமல் தொடக்கம் என்றும் பிரசுரித்திருக்கிறார்கள். அது வரவேற்கத்தக்கது.
 |
குடியரசுத் தலைவருக்குக் கால நிர்ணயம் செய்த தீர்ப்பை எதிர்த்த வழக்கு |
 |
புலிகளைக் காப்பதன் மூலம் |
 |
செல்போனைப் பறித்த |
 |
சாதியக் கொலைகளைத் தடுக்க... |
 |
பரிந்துரைக் கடிதத்தைத் தாக்கல்செய்தல் வேண்டும் |
 |
வங்க இளைஞர்கள் இருவர் கைது |
எழுவாய் பன்மையாக இருக்கும்போது, தாம் என்னும் பன்மை இடம்பெற்றிருத்தல் வேண்டும்.
 |
தீவிரவாதிகள்தாம்
|
தமிழ் நம் தாய்மொழி. அதை முறையாக எழுதுதல் நல்லது. எழுதத் தெரியாதவர்கள் எனில் மன்னித்துவிடலாம்; தெரிந்தும் எழுதாமல் விடுபவர்களை என்ன செய்வதோ? பிழைதிருத்தும் பழக்கம் வழக்கத்திலிருந்து இன்னும் ஒழிந்துவிடவில்லைதானே?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக