இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, ஜூன் 18, 2010

சூப்பர் சிங்கர் ஜூனியர் 2

மலையாளத் தொண்டையிலிருந்து
புறப்பட்டு வரும்
தமிழகத்தின் செல்லக் குரல்


ஓராண்டு காலமாக தமிழக மத்திய தரக் குடும்பத் தாய்மார்களும் குழந்தைகளும் குடும்பத்தினரும் வாரத்தில் நான்கு நாட்கள் தொலைக்காட்சி முன்பு அமர்ந்து கண்டுகழித்த சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 தமிழகத்தின் செல்லக் குரலாக ஒரு மலையாளக் குரலைத் தேர்ந்தெடுத்து ஓய்ந்துவிட்டது. இசைக்கு மொழி இல்லை அது இல்லை. இது இல்லை. எதுவுமே இல்லை. மேலோட்டமாக பார்த்தால் திறமை உள்ளவர்களுக்குத் தானே பரிசு கிடைக்கும் என்று எளிதாகக் கூறிவிடலாம். ஆனால் எல்லாவற்றையும் நாம் எளிதாக எடுத்துக்கொள்வதால் தான் வர்றவன் போறவன் எல்லாம் தமிழனின் தலையில் மிளகாய் அரைக்கிறான். வாரத்தில் நான்கு நாட்கள் சராசரியாக சுமார் ஆறு மணி நேரம் மொத்தம் 52 வாரம் மொத்தத்தில் சுமார் 310 மணி நேரம் தமிழகக் குடும்பத்தினர் பார்த்த நிகழ்ச்சி இது. இதன் மூலம் தொலைக்காட்சி அலைவரிசைக்குக் கிடைத்த விளம்பர வருவாய் எல்லாம் தமிழனின் இளிச்சவாய்த்தனத்தால் அவனது பையிலிருந்து மறைமுகமாக எடுக்கப்பட்டது. அவர்கள் தேர்ந்தெடுப்பதற்கு இவன் தனது கைபேசியிலிருந்து ஒரு குறுஞ்செய்திக்கு சுமார் மூன்று ரூபாய் செலவழிப்பான்.

இங்கே இப்படி நடப்பது போல் ஒரு மலையாள அலைவரிசையில் நடத்தப்படும் போட்டிகளில் தமிழனுக்கு பரிசு கிடைக்கிறதா எனத் தெரியவில்லை. அங்கே அதை அனுமதிப்பார்களா? அம்மையப்பனிடம் இருந்து ஒரு பழம் கிடைக்காத கோபத்தில் தனியாய்ச் சென்று அமர்ந்தவன் முருகன். ஒரு பழம் தானே அது என்ன பெரிய விஷயமா என இறைவனே நினைக்கவில்லை. எனவே ஒரு அப்பாவி மனிதனால் இதை எப்படி எளிதாக எடுத்துக்கொள்ள இயலும். இத்தகைய நிகழ்ச்சிகளை ஏன் தமிழர்கள் நிராகரிக்கக் கூடாது. ரிமோட் நம் கையில் இருந்தும் நாம் ஏன் மற்றொருவரது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். விழித்தெழவே மாட்டோமா? தமிழனின் தலையில் சந்தனம் தடவவேபடாதா?

3 கருத்துகள்:

  1. அந்தோணிராசு23 ஜூன், 2010 அன்று 7:27 PM

    சரியான பதிவு. தலைப்பில் கோபமும் கிண்டலும் இருப்பது போலத் தெரிகிறது. தமிழ்ப் பின்னணிப் பாடகர்கள் எப்போதுமே முன்னணியில் இருந்த்தாகத் தெரியவில்லை… தமிழர்களுக்கு வாழ்வதில் இருக்கும் விருப்பம் ஆள்வதில் இல்லையோ…

    பதிலளிநீக்கு
  2. வந்தாரை வாழவைத்து நாம் வீணாகப்போகிறோமோ என்னவோ. பதிவுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  3. ஏன் தலைப்பை மாற்றிவிட்டீர்கள்?

    பதிலளிநீக்கு