இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், ஜனவரி 12, 2015

சிரசின் கண்கள்

வாளேந்திய படி
வெறிகொண்டு வந்தான் எதிரே
வன்மமும் குரோதமும் மண்டிக் கிடந்தன கண்களில்
எந்தக் கேள்வியுமற்று
இடது கை சிரசின் மயிரைப் பிடிக்க
வலது கையால் தலையை அறுத்து
அவன் முன் வீசினேன்

அவன் கண்களில் குற்றவுணர்வு மண்டத் தொடங்கியது
பழியின் குரூர திருப்தியுடன்
மூடின
சிரசின் விழிகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக