நள்ளிரவின் விபரீதக் கனவால்
உறக்கம் தொலைய
அநிச்சையாய்க்
கை
கை
துழாவி எடுத்தது அலைபேசியை
படிக்கப்படாத குறுஞ்செய்தி ஒன்று
முகப்பில் ஒளிர்ந்தது
குருட்டுத்தனமாக உன்னை நம்புபவர்களை
குருடர்கள் என ஒருபோதும் நிரூபித்துவிடாதே என்றது
இரவு வணக்கத்திற்கென
பின்னிரவில்
தோழியால் அனுப்பப்பட்ட அச்செய்தி
அவள் குருடியா
நான் நம்புகிறேனா
நான் குருடனா
அவள் நம்புகிறாளா
மனம் வலை பின்னத் தொடங்கியது
துயில் தடைபட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக