இன்று சிவாஜி கணேசனின் பிறந்தநாள். அவரது நடிப்பின் நினைவாக ‘அன்னையின் ஆணை’ திரைப்படத்தில் இடம்பெற்ற சாம்ராட் அசோகன் ஓரங்க நாடகத்தை நினைவுகூரலாம். இந்தப் படத்தின் வசனம் கலைஞர் என்றே நினைத்திருந்தேன். ஆனால், படத்தின் வசனத்தை எழுதியிருப்பவர் முரசொலி மாறன்.
அதிகார வெறியில் அறிவிழந்த அசோகன், சாதாரண அசோகன் அல்லன், சாம்ராட் அசோகன். ஆகவே, போர் வேண்டாம் என்ற ஆலோசனைகளைப் புறந்தள்ளுகிறான். வெற்றி போதை தலைக்கேற கலிங்கப் போரில் ஈடுபடுகிறான். வெற்றியும் பெற்றுவிடுகிறான் அசோகன். ஆனால், அதற்காக அவன் கொடுத்த விலை எண்ணற்ற மனித உயிர்கள். போர்க்களக் காட்சிகள் அவனை உலுக்குகின்றன. மூதாட்டி ஒருத்தி காறி உமிழ்வது போல் கேள்வி கேட்கிறாள். அசோகனுக்கு உண்மை உறைக்கிறது.
போர் வழியிலிருந்து விலகி அன்புவழியில் நடக்கத் தொடங்குகிறான். இந்த நாடகத்தில் அசோகனை விஞ்சி நிற்கிறார் நடிப்பில் சிவாஜி.
நாடகக் காட்சியைக் காண இங்கே சொடுக்குங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக